{"title":"Home page","description":null,"products":[{"product_id":"mayan-maaligai-மயன்-மாளிகை-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Mayan Maaligai\/மயன் மாளிகை - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eமயன் மாளிகை என்பது எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சிந்தனைகளையும் அனுபவங்களையும் தொகுத்த கட்டுரை நூல். இந்த நூலில் பயணம், ஆன்மீகம், இசை, வாழ்க்கை அனுபவங்கள் போன்ற பல்வேறு தளங்கள் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கின்றன. இமயமலைப் பயணம், பாங்கோங் ஏரி, லடாக் போன்ற இடங்களின் அனுபவங்கள் வாசகர்களை நேரடியாக அந்தப் பயணத்தில் கலந்து கொண்டது போல உணர வைக்கின்றன. பயண குறிப்புகளுடன் சேர்ந்து எழுத்தாளரின் ஆன்மீக சிந்தனைகள், நண்பர்கள், இசை, வாழ்க்கை பற்றிய ஆழமான எண்ணங்களும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. சாதாரண பயணக் குறிப்புகளை விட மனித மனம், நம்பிக்கை, அனுபவம் ஆகியவற்றின் கலவையாக இந்த நூல் அமைந்துள்ளது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48429751763192,"sku":null,"price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/716pL2clV2L._SL1305.jpg?v=1779204514"},{"product_id":"akkara-adisilum-masik-karuvadum-அக்கார-அடிசிலும்-மாசிக்-கருவாடும்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Akkara Adisilum Masik Karuvadum\/அக்கார அடிசிலும் மாசிக் கருவாடும் - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eநான் உங்களிடமிருந்து விலகி நிற்கிறேன்-அகந்தையினால் அல்ல; நெருப்பைத் தாங்கிக் கொண்டவனின் தனிமையினால். ப்ராமித்யூஸ் மனிதர்களுக்காக கடவுளிடமிருந்து நெருப்பைத் திருடிக் கொண்டு வந்தான். அந்த நெருப்பு சமையலுக்கானது அல்ல - அது விழிப்புணர்வு மற்றும் ஞானம் ஆகியவற்றின் குறியீடு. இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள், அந்த நெருப்பின் சிதறல்கள். நான் உங்களுக்குக் கொடுக்க நினைப்பது ஆறுதல் அல்ல; அசெளகரியம். ஏனெனில், நம் வாழ்க்கை பெரும்பாலும் நாமே கட்டிய பொய்களின் சுவர்களுக்குள் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சுவர்களை எரிக்காத வரை, எந்த வெளிச்சமும் உள்ளே வராது. ப்ராமித்யூஸ் தண்டிக்கப்பட்டான்- மனிதனை உயர்த்த முயன்றதற்காக. நானும் இந்த எழுத்துக்களில் உங்களுக்குப் பழக்கமாகி விட்ட நிழல்களைக் கிழிக்க முயல்கிறேன். நீங்கள் நம்ப விரும்பும் கதைகளை அல்ல; நீங்கள் தவிர்க்க நினைக்கும் சத்தியங்களை இங்கே சந்திக்க நேரிடும். இந்த நூல் உங்களுக்கு பதில்களைத் தராது. இது உங்களை உங்களுக்கே எதிராக நிறுத்தும். நான் உங்களுடன் இல்லை என்று சொல்லும் போது, அது வெறுப்பீனம் அல்ல. உங்கள் மத்தியிலிருந்து விலகி வெளியே போய் நின்று, உங்கள் உலகைப் பார்க்கும் அவசியம் எனக்கு உண்டு. அந்தத் தூரமே இந்த எழுத்தின் தீவிரம் இந்த நெருப்பை நீங்கள் ஏற்றிக் கொள்ளலாம்; அல்லது தவிர்க்கலாம். ஆனால் ஒருமுறை இதன் ஒளியைப் பார்த்துவிட்டால், மீண்டும் இருளை நிம்மதியாகக் கொண்டாட முடியாது... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48429893419256,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/613MnuIBVnL.jpg?v=1779205286"},{"product_id":"jodippuraavai-enge-kaanom-ஜோடிப்புறவை-எங்கே-காணோம்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Jodippuraavai Enge Kaanom?\/ஜோடிப்புறவை எங்கே காணோம்? - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eபுனைவுகளின் வழியே ஒரு தனித்துவமான ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்குவதே என் முயற்சி. இது பாலியல் இன்பத்தைத் தாண்டி, ஆன்மீகப் பேரின்பத்தையும் உள்ளடக்கியது. பாக்ஹின் சிம்ஃபனியைக் கேட்கும்போது நம்மை மீறி அடையும் transcendal bliss \u0026amp; காம உச்சத்தின் இன்மை - இவை இரண்டும் ஒரே சூன்யத்தின் வெளிப்பாடுகள். கடவுள் சூன்யம், மரணமும் சூன்யம்,காமம் சூன்யம் - இவை மூன்றிலும் “நான்\" இல்லாமல் போகிறது. அதனால்தான் ஜார்ஜ் பத்தாய் போக உச்சத்தை La petite mort என்கிறார். சிறிய மரணம். பீத்தோவன் தன் செவித்திறனை முழுமையாக இழந்த நிலையிலும் ஒன்பதாம் சிம்ஃபனியைப் படைத்தது போல - இழப்பின் ஊடே பேரின்பம் பிறக்கிறது. அத்தகைய ஈரோடிக் ஏஸ்தெடிக்ஸை உருவாக்கும் முயற்சியே 'ஜோடிப்புறாவை எங்கே காணோம்?' - காமம், இழப்பு, சூன்யம் மூன்றும் பின்னிப் பிணைந்து வாசகரை இன்மையின் பேரின்பத்தில் ஆழ்த்தும் ஒரு பயணம். - சாரு நிவேதிதா.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48431377481976,"sku":null,"price":660.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/51gzaxy8TAL.jpg?v=1779210374"},{"product_id":"kodambakkam-கோடம்பாக்கம்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Kodambakkam\/கோடம்பாக்கம் - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eஒரு டஜன் நூல்களுக்கான வேலையை இந்த ஒரு நூல் வாங்கிவிட்டது. இதை நீங்கள் வாசிக்கத் தொடங்கும் தருணத்திலேயே உணர்ந்து கொள்வீர்கள். சினிமா பற்றி நான் எழுதுவதை நிறுத்திப் பத்தாண்டுகள் இருக்கும். சினிமா ரசனை என்றால் என்ன? ஒரு திரைப்படத்தை எப்படி deconstruct செய்வது? எது நல்ல சினிமா? மாற்று சினிமா என அறியப்படும் திரைப்படங்களின் பிரச்சினை என்ன? - இத்தகைய கேள்விகளின் வழியாக, சினிமா குறித்த உங்கள் பார்வையை விசாலமாக்கும் ஒரு முயற்சிதான் இந்த நூல்.... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48431431549176,"sku":null,"price":470.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/51jE7keVYWL.jpg?v=1779210611"},{"product_id":"nagore-dhamrootum-aattayaampatti-murukkum-நாகூர்-தம்ரூட்டும்-ஆட்டையாம்பட்டி-முறுக்கும்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Nagore Dhamrootum Aattayaampatti Murukkum\/நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும் - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eஎன்ன இது, மூன்றாம் உலக யுத்தம் வரப்போகின்ற மாதிரியான இந்த சூழலிலும் ஜாலியாக நாவல், கதை என்று எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார் நண்பர் ஒருவர். Underground திரைப்படத்தில் வீட்டின் மீது குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும்போது கூட நாயகன் நடனமாடிக் கொண்டிருப்பான். அப்படிபட்ட மனநிலையில் வாழ்பவன் நான். எனக்குக் கடந்த காலமும் இல்லை, எதிர்காலமும் இல்லை. கடந்த காலம் குறித்த வருத்தமில்லாமல், எதிர்காலம் குறித்த பயமில்லாமல், வர்தமான காலத்தில் வாழ்பவனே விவேகி என்கிறது சுபாஷிதம். இத்தொகுப்பில் உள்ள இரண்டு கதைகளைத் தவிர மற்றவை கொரோனா காலத்தில் எழுதப்பட்டவை. உலகமே மரண பீதியில் ஒடுங்கியிருந்த போது, உச்சகட்ட களியும் கொண்டாட்டமுமாக எழுதப்பட்ட இந்தக் கதைகளே அதற்க்கு சாட்சி..\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48431455994104,"sku":null,"price":500.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/51MF8j1-_HL.jpg?v=1779210743"},{"product_id":"culture-vulture-கல்ச்சர்-வல்ச்சர்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Culture Vulture\/கல்ச்சர் வல்ச்சர் - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp\u003e\u003cmeta charset=\"UTF-8\"\u003e\u003cspan\u003eஇந்த நூலிலுள்ள கட்டுரைகளை எழுதி சுமாராக ஒரு தசாப்தம் ஆகிறது. இன்றைய என் மனநிலையில் இதை நான் எழுதியிருக்க சாத்தியமே இல்லை. காரணம், நான் என்னைச் சுற்றியுள்ள மனித வாழ்விலிருந்து விலகி,ஒரு தவசியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் திட்டமிட்டுள்ள புனைவுகளை எழுதி முடிப்பதில் மட்டுமே என் கவனம் குவித்து கிடக்கிறது. இப்போது இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது எனக்குள் ஒரு நடுக்கம் உண்டாகிறது. என்னை எப்படி உயிரோடு விட்டு வைத்தார்கள் என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலக்கியம் தெரியாது என்பதனால் பிழைத்தேன்... - சாரு நிவேதிதா\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48431495577848,"sku":null,"price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/51Lk4eXHPIL.jpg?v=1779210895"},{"product_id":"namanai-anjom-நமனை-அஞ்சோம்-charu-nivedita-சாரு-நிவேதிதா","title":"Namanai Anjom\/நமனை அஞ்சோம் - Charu Nivedita\/சாரு நிவேதிதா","description":"\u003cp style=\"text-align: left;\"\u003eதமிழின் ஆதி கவிகளான சித்தர்கள் பிண்டத்தை (human body) அண்டத்திலும் (cosmos) அண்டத்தைப் பிண்டத்திலும் கண்டவர்கள். இந்தப் பேரண்டத்தையே தானாகவும் (self) தன்னையே பேரண்டமாகவும் காணும் நிலை அது. அப்படிக் கண்ட கவிஞன் இந்தப் பேரண்டத்தின் முன்னே நின்றபடி அதனோடு உரையாடிக் கொண்டிருக்கிறான். நட்சத்திரக் கூட்டங்களை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் போது – ஆழ்கடலில் ஒரு கட்டுமரத்தில் சென்று கொண்டிருக்கும் போது – கண்களை மூடி வனத்தின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அல்லது ஒரு மெத்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் அந்த உரையாடல் நிகழலாம்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅந்த உரையாடல் மனித சமூகத்தின் கலாச்சார, வரலாற்று ஞாபகங்களைத் தன் சுவாசமாகக் கொண்டிருக்கும் மொழி என்ற தளத்தில் நிகழ்வதால் கவிஞனுக்கும் மற்ற மனிதனுக்குமான உறவு ஏற்படுகிறது. இருந்தாலும் கவிஞன், தான் கையாளும் மொழியைப் படிமங்களாகிய அணுத்துகள்களாக மாற்றி விடுவதால் அந்த ரஸவாதம் (alchemy) அறியாத மனிதன் கவிஞனிடமிருந்து விலகிப் போகிறான்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅப்படியின்றி கவிஞனின் உரையாடலைக் கேட்க நேரும் மனிதன் பாக்கியவான். அவன் கவிஞனைப் போலவே அண்டத்திலொரு பிண்டமாகத் தன்னை உணரத் துவங்குகிறான். அப்படி உணர்பவனால் ஆஷ்விட்ஸ்களை உருவாக்க முடியாது. அவன் இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளோடும் தன்னையே காண்பான்.\u003cbr\u003e\u003cbr\u003eநூலிலிருந்து...\u003c\/p\u003e","brand":"Raasa Leela Pathippagam","offers":[{"title":"Default Title","offer_id":48775969276152,"sku":null,"price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0829\/1444\/3512\/files\/7_Front_Wrapper_-_Namanai_Anjom.jpg?v=1780646398"}],"url":"https:\/\/raasaleelapathippagam.com\/collections\/frontpage.oembed","provider":"Raasa Leela Pathippagam","version":"1.0","type":"link"}